சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மின்சாரம் குடிக்காத 'பிரிஜ்!'

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மின்சாரம் குடிக்காத 'பிரிஜ்!'

மின் தட்டுப்பாடு உள்ள வெப்ப நாடுகளில், உணவுப் பொருட்களை பாதுகாக்க குளிர்பதனப் பெட்டிகளை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டு. கடைகளில் வெகு நேரம் மின்சாரம் இல்லாவிட்டால், பெட்டியிலுள்ள உணவுப் பொருட்கள் கெட்டு விடும். இதற்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த, 'கூல் இன்பினிடி' தற்போது, 'ஐஸ் வோர்ட் 300' என்ற புதிய குளிர் பதனப் பெட்டியை உருவாக்கியுள்ளது.

இதற்கு, ஆறு மணி நேரம் மின்சாரம் இருந்தால் போதும். அந்த நேரத்திற்குள், பெட்டியைச் சுற்றி நிரப்பப்பட்டுள்ள சாதாரண நீரை ஐஸ் கட்டிகளாக மாற்றி விடும். பிறகு மின்சாரம் இல்லாவிட்டாலும், அடுத்த, 48 மணி நேரத்திற்கு, பெட்டிக்குள் உள்ள உணவுகளை, 6 டிகிரிக்கும் குறைவான குளிர்ச்சியில் வைத்திருக்கும்.

ஆசிய நாடுகளில் ஐஸ் கட்டிகளை வெளியில் வாங்கி வந்து, தெர்மாகோல் பெட்டிகளில் கொட்டி, அதில் நேரடியாகவே உணவுப் பொருட்களை புதைத்து வைப்பர். அதைவிட, 'ஐஸ் வோர்ட் 300' பெட்டியில், நல்ல குளிர்ச்சியை கூடுதல் நேரத்திற்கு பெற முடியும் என்கின்றனர், அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-ஜன-202000:26:20 IST Report Abuse
 nicolethomson அருமையான ஐடியா
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
20-ஜன-202012:08:20 IST Report Abuse
pradeesh parthasarathyஅது கிறிஸ்தவ நாட்டில் பாவாடைகளால் கண்டுபிடிக்கப்பட்டது ...இந்த கண்டுபிடிப்புகளை பற்றி சமசுகிருதம் எதுவும் சொல்லவில்லையோ ...?...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
22-ஜன-202014:01:25 IST Report Abuse
TamilArasanயோவ் அவனே சொல்றான் ― ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made.”...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X