குடியரசு தினத்தில் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பயங்கரவாதிகள் கைது

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (26)
Advertisement
குடியரசு தினத்தில் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பயங்கரவாதிகள் கைது

இந்த செய்தியை கேட்க

ஸ்ரீநகர்: காஷ்மீரில் குடியரசு தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் நடத்திய சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.இது தொடர்பாக 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டது. எனினும் பாதுகாப்புபடையினர் பணியில் இருந்து வருகின்றனர். இன்று காஷ்மீரின் ஹஸ்ரத்பால் பகுதியில் உள்ளூர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 4 பேர் சிக்கினர்.





அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஜெய்ஷி-இ- முகம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எனவும், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று பயங்கர தாக்குதல் நடத்திட சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
சிக்கியவர்கள் அஜிஸ் அகமது ஷேக், உமர் ஹமீத் , இம்தியாஸ் அகமது , ஷாகீல் பரூக் என்ற பயங்கரவாதிகள் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், சாட்டிலைட் போன்கள், போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் அதிரடி வேட்டையால் மிகப்பெரிய தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202013:28:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பாகிஸ்தானியர்கள் காஷ்மீரி மக்களை திருமணம் செய்துகொண்டால் குடியுரிமை கொடுக்க வழிவகை செய்த சட்டம் 370 தான் இதற்க்கு காரணம். பாகிஸ்தானிகள் இங்கே குடியேறி இப்போது அந்த மாநிலத்தை பிரிக்க நினைக்கிறார்கள். எல்லாம் நேரு செய்த தவறு
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
17-ஜன-202009:49:25 IST Report Abuse
வல்வில் ஓரி எலக்சன் வருதுல்ல ? அதான்.. அப்படித்தானே ? .. ஆனந்தா, வந்தியா மற்றும் பல முரசொலிகள் எல்லாம் எல்லாம் இங்க வர்றியா ?
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
17-ஜன-202006:42:23 IST Report Abuse
konanki தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல கள்ள பணம் புழக்கத்துக்கும் புகலிடம். ம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X