சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 16, 2020
Advertisement

அறிவியல் ஆயிரம்

எரிமலை சீற்றம்


பிலிப்பைன்சில் உள்ள 'டால் எரிமலை', ஜன., 12 முதல் எரிமலை குழம்பை வெளியிட்டு வருகிறது. இது பிலிப்பைன்சின் இரண்டாவது முக்கியமான எரியும் எரிமலை. கடந்த 500 ஆண்டுகளில் 30 முறை வெடித்துச் சிதறியுள்ளது. இதுவரை 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 1911ல் இந்த எரிமலை வெடிப்பால் 1,355 பேர் உயிரிழந்தனர். லுாஜான் தீவில் உள்ள டால் ஏரியின் நடுவில் இது அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,020 அடி உயரத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 50 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.


தகவல் சுரங்கம்

கிழக்கின் கூட்டணி


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சீனா உள்ளிட்ட நாடுகளால் 2001 ஜூன் 15ல் தொடங்கப்பட்டது. தலைமையகம் பீஜிங். இது அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டமைப்பு. இதில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இது 'கிழக்கின் கூட்டணி' என அழைக்கப்படுகிறது. இதன் பொதுச்செயலராக விளாடிமிர் நோரோவ் உள்ளார். ஆண்டுதோறும் இந்த அமைப்பு சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. 2020க்கான மாநாடு இந்திய தலைநகர் டில்லியில் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X