பொது செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் தேங்காய் வைத்து போர்க்காய் விளையாட்டு

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுக்கோட்டை:பொங்கல்விழாவை முன்னிட்டு செரியலுாரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போர்க்காய் விளையாட்டு போட்டி நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செரியலூர், மேற்பனைக்காடு உட்பட பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் எதிரெதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக்

புதுக்கோட்டை:பொங்கல்விழாவை முன்னிட்டு செரியலுாரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போர்க்காய் விளையாட்டு போட்டி நடைபெற்றது.



latest tamil news



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செரியலூர், மேற்பனைக்காடு உட்பட பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் எதிரெதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர்.


latest tamil news



கடந்த மூன்று ஆண்டுகளாக செரியலுார் இளைஞர்களால் களம் அமைத்து போர் தேங்காய் உடைக்கும் போட்டியும் வெற்றி பெறும் தேங்காய்க்கு ரூ. ஆயிரம் பரிசும் அறிவிப்பர். நடந்த போர்க்காய் உடைக்கும் போட்டிக்கு முதல் பரிசு பெறும் தேங்காய்க்கு ரூ. 2001, இரண்டாம் பரிசு ரூ. 1001, மூன்றாம் பரிசு ரூ 501 மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த வித்தியாசமான போட்டியில் பலர் பங்கேற்றனர். பல சுற்றுகளில் போட்டியிட்டு கடைசி தேங்காயை உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்க்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17-ஜன-202007:45:33 IST Report Abuse
Subramanian Arunachalam ஏன் இந்த விளையாட்டை தடை செய்ய மத சார்பின்மை கும்பல் வழக்கு போட வில்லை . உடனடியாக வழக்கு போட்டு தடை வாங்குங்கள்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜன-202020:30:04 IST Report Abuse
madhavan rajanஅந்த கும்பல் இப்படிப்பட்டவர்களை ஆதரிக்கும். இதுவும் தமிழனின் வீர விளையாட்டு என்று கூறினாலும் கூறுவார்கள். இதை தடை செய்யவேண்டுமென்றால் இது முக்கண்ணன் சிவனின் வேண்டுதல்படி முக்கண் தேங்காயைக் கொண்டு ஆடுவது என்று கூறினால் தடை செய்யக் குரல் கொடுக்கும் திக, திமுக, சிறுத்தைக் கட்சிகள். ....
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-202004:46:12 IST Report Abuse
Nepolian S வினோதமானது அல்ல இது டெல்டா மாவட்டங்களில் முன்பு பிரபலமான பாரம்பரிய போட்டி தான்.. சேவல் சண்டைக்கு நிகரானது
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜன-202020:23:10 IST Report Abuse
A.George Alphonse தமிழன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X