அகமதாபாத்: குஜராத் மாணவி ஒருவர் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் மோட்சா பகுதியை சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (17) இவர் டீன் ஏஜ் பிரிவில் நீண்ட கூந்தல் வளர்த்து சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த 2018 ம் ஆண்டில் 170செ.மீ அளவிற்கு கூந்தல் வளர்த்து ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இவரே 190 செ.மீ அளவிற்கு வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் சாதனையை இவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஏபிரில் என்பவர் 152.5 செ.மீ அளவிற்கு வளர்த்து சாதனை படைத்தார். மேலும் கெயிட்டோ என்பவர் 155.5 செ.மீ நீளம் முடி வளர்த்து சாதனை படைத்திருந்தார். இந்த இருவரின் சாதனையை கடந்த 2018 ல் நிலன்ஷி முறியடித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE