பொது செய்தி

இந்தியா

பிரதமரிடம் கேள்வி கேட்க தயாராகும் மாணவர்கள்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி: வரும் 20 ம் தேதி பள்ளி மாணவர்கள் பிரதமரை சந்தித்து கேள்வி கேட்க தயாராக உள்ளனர்.






இது குறித்து மனித வள மேம்பாட்டுதுறை அமைச்கத்தின் இணை செயலாளர் ஆர்.சி., மீனா கூறியதாவது:மத்திய அமைச்சகத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், மைகோவ் ஆகியவை இணைந்து சிறு கட்டுரை போட்டி ஒன்றை பரிக்ஷா பெ சர்ச்சா 2020 என்ற பெயரில் நடத்தியது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த ஆண்டு டிச.,2 ம் தேதி முதல் டிச.,23 ம் தேதி வரையில் கட்டுரை தேர்வு நடைபெற்றது.





மூன்றாம் பதிப்பாக நடத்தப்படும் இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் டில்லியில் உள்ள டகடோராத மைதானத்தில் பிதமருடன் பேச தயாராக உள்ளனர். இந்த நிகழ்ச்சியை நாடுமுழுவதிலும் உள்ள 15 கோடி மாணவர்கள் பள்ளிகளில் நேரடியாக பார்ப்பதற்கு தேவையான ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளி நாட்டில் பயிலும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202013:39:45 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மாணவர்களிடம் பேசப்போகிறார் மோடி என்று தெரிந்துகொண்டு மாணவர்களுடன் பேச தயாரா என்றான் ராகுல். இதோ மாணவர்களுடன் பேசி அதை பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பகிர்ந்து மாணவர்களை தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்துகிறார். இவர் தான் உண்மையான தலைவர். வாழ்க மோடி
Rate this:
Share this comment
Cancel
narayan - mayotte,எரிட்ரியா
17-ஜன-202008:04:31 IST Report Abuse
narayan எழுதி கொடுத்த கேள்வி தானே? இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்
Rate this:
Share this comment
Cancel
கொடுக்ககு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
17-ஜன-202006:10:44 IST Report Abuse
கொடுக்ககு கேள்விகேட்க போகிறார்களா ?? ஆஹா தல மறஞ்சுக்குவாரே ....எது ??? ஏற்கனவே எழுதிக்கொடுத்த கேள்வியா ஒஹ்ஹஹ் அப்ப சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X