பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இருந்து பறந்து வந்த கல்லீரல்

Added : ஜன 16, 2020
Advertisement

கோவை,: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல், ஏர் ஆம்புலன்சில் கோவை எடுத்து வரப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார், 23. கூட்டுறவு வங்கியில், தற்காலிக பணியாளர். 11ம் தேதி சாலை விபத்தில், படுகாயமடைந்து, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 15ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
சரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் சம்மதித்தனர். மதுரை, சென்னை மருத்துவக் கல்லுாரி டீன்கள் மூலம், உடலுறுப்புகள் எடுக்கப்பட்டன. இதயம், விமானம் மூலம் சென்னைக்கும், கண்கள், திருச்சிக்கும், கிட்னி மதுரை, தஞ்சாவூருக்கும் வழங்கப்பட்டது.
கல்லீரலை, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்த, முடிவு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனையின் டாக்டர்கள், மதுரை சென்று, அங்கிருந்து, ஏர் ஆம்புலன்சில், 30 நிமிடங்களில், கோவைக்கு கல்லீரலை எடுத்து வந்தனர். அது, நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி கூறுகையில், ''மதுரையில் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரலை எடுத்து வர, தாமதம் ஏற்படும் என்பதால், ஏர் ஆம்புலன்சில் எடுத்து வந்து, நோயாளிக்கு பொருத்தப்பட்டது,'' என்றார்.
முன்னதாக, மதுரையில் இருந்து வந்த ஏர் ஆம்புலன்ஸ், கோவை வட்டமலையாம் பாளையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து, வாகனம் கல்லீரல் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால், வழிநெடுகிலும், போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X