பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (5)
Advertisement
 பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்


புதுச்சேரி :''நானோ, என் மகனோ நில அபகரிப்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக, ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்; குற்றச்சாட்டை நிரூபிக்கா விட்டால், பொது வாழ்க்கையில் இருந்து கிரண்பேடி விலக தயாரா?,'' என, முதல்வர் நாராயணசாமி சவால் விட்டுள்ளார்.
அவரது பேட்டி:காங்., - எம்.எல்.ஏ., தனவேலு, கவர்னரை சந்தித்து, நானும், என் மகனும் நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறியதாகவும், அதற்கான ஆதாரத்தை தருவதாக அவர் தெரிவித்ததாகவும், ராஜ்நிவாசில் இருந்து, பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாத, ஆவணம் இல்லாத, வாய்மொழியான குற்றச்சாட்டை, பத்திரிகை செய்தியாக கவர்னர் வெளியிட்டது, அவருக்கு நிர்வாகம் தெரியாது என்பதை காட்டுகிறது. நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நானோ, என் மகனோ, என் குடும்பத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும், நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறோம் என, ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், நான் முதல்வர் பதவியில் இருந்து, ராஜினாமா செய்ய தயார்.ஆனால், என் மீது புகார் கூறியவர்களோ அல்லது அந்த புகாரை கேட்டு, பத்திரிகை செய்தி வெளியிட்ட கவர்னரோ, அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால், பொது வாழ்க்கையில் இருந்து வெளியில் செல்ல தயாரா? இவ்வாறு, அவர் கூறினார்.

காங்., - எம்.எல்.ஏ.,திடீர், 'சஸ்பெண்ட்'
புதுச்சேரி, காங்., தலைவர் நமச்சிவாயம் நேற்று அளித்த பேட்டி:பாகூர், எம்.எல்.ஏ., தனவேலு, தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியிலும் ஈடுபட்டார். இது குறித்து, அகில இந்திய தலைமையிடம் தெரிவித்தோம்.கட்சி விரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும், கட்சி தலைமை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
தனவேலு, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், காங்., கட்சியில் இருந்து, தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு, விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அவர் தரும் விளக்கத்தை, ஒழுங்கு நடவடிக்கை குழு பரிசீலிக்கும். அதன் மீதான முடிவை, அகில இந்திய தலைமை அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஜன-202013:53:17 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பதினைந்து நாள் கெடு பேச்சை மறந்து உடனே ஆவேசம் கொள்வதேன். மாட்டிக்கொண்டோமே என பயமோ. ஊல் அபகரிப்பு நிரூபணமானால் உயிர் துறக்க தயாரா. சொல்வாரா..சாமி......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202017:48:08 IST Report Abuse
தமிழ்வேல் இதையே அந்த அம்மாகிட்டேயும் கேட்கலாமே... குற்றச்சாட்டு சொல்பவர் ஆதாரம் பெறாமலா சொல்வது ? அதுவும் ஒரு பொறுப்பில் உள்ளவர் ?...
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
17-ஜன-202012:30:19 IST Report Abuse
Poongavoor Raghupathy Narayaswamy must be fortunate to have a Governor like Kiran Bedi. Kiran is a watch on Looting of Public money and preventing this and hence Kiran Bedi is opposed without any valid reason by Narayaswamy. Same thing is there with Modi and just because Modi is against corruption there are protests instigated by opposition Parties. Sonia Rahul Chidambaram looted merrily when in power are now forced to seek bail in looting charges. Modi whether he is successful in improving the economy or not has shown the Country how to catch the corrupt people by not being in corruption. If Modi is not given the power to rule India our Indian people will have to suffer with more problems for our Country.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
17-ஜன-202007:45:11 IST Report Abuse
natarajan s இவர் எதற்க்கு இப்படி திருமதி கிரண் பேடி என்றாலே பதறுகிறார் என்று தெரியவில்லை , ஒரு MLA புகார் அளிக்கிறார் ஒரு முதல்வர் மேல்,ஆளுநர் அந்த புகார் பற்றிய செய்தியை வெளியிடுகிறார் , அதற்கு ஏன் இப்படி ஒரு reaction , வழக்கம் போல் தமிழக அரசியல்வாதி போல் சட்டப்படி சந்திப்பேன் என்று கூற வேண்டியதுதானே
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202017:50:41 IST Report Abuse
தமிழ்வேல் உங்களை திருடன்னு சொன்னா குதிக்க மாட்டீங்களா ? ஆதாரத்தையும் கேட்டு வாங்கி பார்த்துட்டு குற்றச்சாட்டை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது புத்திசாலித்தனமாகாதா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X