பொது செய்தி

தமிழ்நாடு

தபால் டெலிவரியில் தமிழகம் 2ம் இடம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தபால் டெலிவரி வேகம், முன்பை விட அதிகரித்துள்ளது. இதில், தமிழகம், நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லி முதலிடத்தில் உள்ளது.தபால் சேவையின், கடந்தாண்டு சாதனைப் பட்டியலை, தபால் துறை, சமீபத்தில் வெளியிட்டது. இதில், தபால் டெலிவரி செய்ய எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் குறைந்துள்ளதாகவும், தாமதமின்றி விரைவிலேயே டெலிவரி செய்யப்படுவதாகவும்
தபால் டெலிவரியில்  தமிழகம் 2ம் இடம்

தபால் டெலிவரி வேகம், முன்பை விட அதிகரித்துள்ளது. இதில், தமிழகம், நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லி முதலிடத்தில் உள்ளது.
தபால் சேவையின், கடந்தாண்டு சாதனைப் பட்டியலை, தபால் துறை, சமீபத்தில் வெளியிட்டது. இதில், தபால் டெலிவரி செய்ய எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் குறைந்துள்ளதாகவும், தாமதமின்றி விரைவிலேயே டெலிவரி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைந்து, தபால்களை டெலிவரி செய்யும் மாநிலங்களில், முதலிடத்தில், டெல்லி - 46 மணி நேரம், உள்ளது. இரண்டாமிடத்தில் உள்ள தமிழகம், 66 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்கிறது.கர்நாடகா - 74, மஹாராஷ்டிரா - 84, மத்திய பிரதேசம் - 85 மணி நேரம் என, அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தெலுங்கானா - 112, அசாம் - 118, ஆந்திரா - 121, ஜம்மு காஷ்மீர் - 122, ராஜஸ்தான் - 134 மணி நேரம் என, கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. நாடு முழுவதும், ஒரு தபால், சராசரியாக, 82 மணி நேரத்திற்குள் உரியவருக்கு டெலிவரி செய்யப்படுவதாக, தபால் துறை அறிவித்துள்ளது.

தபால் துறை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:தற்போது, டிஜிட்டல் கையடக்க கருவி, தபால்காரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு நாளில் தபால்கள் டெலிவரி செய்யும் விபரங்களை, மாலைக்குள், அந்தந்த தபால் நிலையங்களில் உள்ள கணினியில் தபால்காரர் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது, கையடக்க கருவியிலேயே, டெலிவரி செய்த இடத்தில் இருந்தே நேரடியாக பதிவேற்றப்படுவதால், நேரம் மிச்சமாகிறது, இதுவே, விரைவாக டெலிவரி செய்ய, முக்கிய காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-ஜன-202020:27:23 IST Report Abuse
J.Isaac ஒரு காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியமாக விளங்கிய துறை இன்று அதன் மதிப்பை இழந்து நிற்கிறது. ஒரு ரெவின்யூ ஸ்டாம்பிற்கு நான்கு போஸ்ட் ஆபிஸ்க்கு அலைந்தேன். கிடைக்கவில்லை.
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
17-ஜன-202017:48:05 IST Report Abuse
Tamil தமிழக தபால் துறையில் வடஇந்தியர்கள் டெலிவரி செய்ய வருகிறார்கள். இவ்ரகள் தபால் பணியை செய்வதற்கு தமிழில் நுழைவு தேர்வு வெற்றியைப்பெறவேண்டும் இவர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள். தமிழக தபால் துறையில் எவ்வளவு வடஇந்தியர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார்கள் ??? அவர்கள் தமிழில் எப்படி தேர்ச்சி பெற்றார்கள் ???
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
17-ஜன-202012:27:07 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao பதிவுத் தபால், விரைவுத் தபால் போன்று கையெழுத்து வாங்கி கொடுக்கும் தபால்களில் இது உண்மைதான். ஆனால் தபால் கார்டுகள், சாதாரணத் தபால்கள் போன்றவை பெரும்பாலான தபால் நிலையங்களில் டெலிவரி செய்யப் ப்படுவதேயில்லை. "சார், சாதாரணத் தபால் எல்லாம் எதிர்பார்க்காதிங்க" என்று பல தபால்காரர்கள் வாய் திறந்து சொல்லி விடுகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று நான் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. என்றைக்கு சாதாரண தபால் உட்பட அனைத்து தபால்களை விநியோகம் செய்கின்றனரோ அன்றுதான் இவர் கூற்றில் உண்மை உள்ளது என்று ஒப்புக் கொள்ள முடியும். இதற்காக பொது மக்கள் வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X