பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

கூடலுார் :பெரியாறு அணையில் இருந்து, தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த நீர், 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்ட எல்லையில், கேரளாவில் பெரியாறு அணை அமைந்துள்ளது. சில நாட்களாக, நீர்பிடிப்பில் மழையின்றி, பெரியாறு அணை நீர்மட்டம், வெகுவாக குறைந்து வருகிறது.நேற்று காலை, நீர்மட்டம், 120.25 அடியாக இருந்தது; மொத்த உயரம், 152 அடி. நீர்வரத்து வினாடிக்கு, 28 கன அடியாக உள்ளது. இதனால், தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த, 800 கன அடி நீர், 600 கன அடியாக குறைக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில், இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு, நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுப்பதற்காக, நீர் திறப்பை குறைந்துள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வைகை அணையின் நீர்மட்டம், 57.17 அடியாக உள்ளது; மொத்த உயரம், 71 அடி. அணைக்கு நீர்வரத்து, 414 கன அடியாகவும், நீர் திறப்பு, 260 கன அடியாகவும் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X