சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகத்தில் தீ விபத்து ஆணவங்கள் எரிந்து சாம்பல்

Added : ஜன 16, 2020
Advertisement

கடலுார்,: கடலுார் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. கடலுார், செம்மண்டலத்தில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு அலுவலகத்தின், இரண்டாவது தளத்தில், கணக்கு பிரிவு துணை மேலாளர் மற்றும் தணிக்கை பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பொங்கல் விடுமுறையால், பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில், நேற்று அதிகாலை 5:30 மணியளவில், மர்மமான முறையில் தீ பிடித்து எரியத் துவங்கியது. அருகில் வசிப்பவர்கள், கடலுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி செந்தில்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயை கட்டுப்படுத்த முடியாததால், நெல்லிக்குப்பம், சிப்காட் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐந்து மணி நேரத்திற்கு மேலாக போராடி, பகல், 11:00 மணியளவில் தீயை அணைத்தனர். அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர், டேபிள், சேர், பீரோ, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகின.தணிக்கை பிரிவு அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் இருந்ததால் தீ வைத்து எரிக்கப்பட்டதா அல்லது மின் கசிவால் தீ விபத்து நடந்ததா என்பது குறித்து, கடலுார் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X