சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசவத்தில் பெண் மரணம் உறவினர்கள் போராட்டம்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 பிரசவத்தில் பெண் மரணம்  உறவினர்கள் போராட்டம்


விருதுநகர் : விருதுநகர் அருகே, பிரசவத்தின்போது இளம்பெண் இறந்ததற்கு செவிலியரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மனைவி கனகா, 24. எம்.அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல் பிரசவம் நடந்தது. 'காப்பர் - டி' வைக்கப்பட்டது.இருப்பினும், முதல் குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகும் நிலையில், மீண்டும் கர்ப்பமானார். எம்.அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். நேற்று முன்தினம் காலை, பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அதே சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார்.

பகல், 1:30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரத்த போக்கு அதிகமானதால், செவிலியரே தையலும் போட்டுள்ளார். தாமதமாக வந்த டாக்டர், தையல் தவறாக போட்டுள்ளதாக கூறி, அதை பிரித்து, வேறு தையல் போட்டுள்ளார். இருப்பினும் ரத்த போக்கு நிற்கவில்லை. மாலை, 4:30 மணிக்கு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இரவு, 10:45 மணிக்கு கனகா இறந்தார். குழந்தை நலமாக உள்ளது.ஆத்திரமடைந்த உறவினர்கள், டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உடலை வாங்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனிசாமி கூறுகையில், ''மாவட்ட மகப்பேறு மருத்துவர் தலைமையில், குழு அமைத்து விசாரிக்கப்படும். தவறு இருக்கும் பட்சத்தில், டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
17-ஜன-202007:49:51 IST Report Abuse
Girija அப்பாவி உயிர்களுடன் விளையாடும் இந்த பேய்களை மருத்துவப்பணியில் இருந்து நீக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X