ரூபாய் நோட்டில் லக்ஷ்மி படம்: சுப்பிரமணியன் சுவாமி 'ஐடியா'

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (12+ 85)
Advertisement
ரூபாய்,லக்ஷ்மிபடம்,சுப்பிரமணியன்சுவாமி

காண்டுவா : இந்திய ரூபாய் நோட்டுகளில், லக்ஷ்மி தேவியின் உருவத்தை பதித்தால், அதன் நிலை மேம்படும் என்று பா.ஜ., - எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், காண்டுவா மாவட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சுப்பிரமணியன் சுவாமி, நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, இந்தோனேசியா நோட்டில், விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர் கூறியதாவது:இந்திய ரூபாய் நோட்டுகளிலும், நாமும் அதை பொறிக்கலாம். அதற்கு, நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். விநாயகர் தடைகளை தகர்த்து எறிபவர். எனினும், ரூபாய் நோட்டுகளில், விநாயகருக்கு பதில், லக்ஷ்மி தேவியின் உருவத்தை பதிக்கலாம். அப்படி செய்தால், இந்திய நாணயத்தின் நிலை மேம்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில், ஆட்சேபணைக்குரிய விஷயம் எதுவும் இல்லை. மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், இந்த சட்டத்திற்கு முன்னரே ஆதரவு தெரிவித்திருந்தனர். கடந்த 2003ம் ஆண்டு, பார்லிமென்டில் பேசிய மன்மோகன் சிங் கூட, இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டுகோள் விடுத்தார்.அனைவரும் கேட்டுக்கொண்டதால், தற்போது, நாங்கள் அந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளோம். ஆனால், இப்போது, அந்த சட்டத்தால், பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்கள் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு, அப்படி என்ன அநீதி இழைக்கப்பட்டது என்பதை கூறுங்கள். பாகிஸ்தான் முஸ்லீம்கள் நம் நாட்டிற்கு வர விரும்பவில்லை. அப்படி இருக்க, நாம் ஏன் அவர்களை வற்புறுத்தவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12+ 85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-ஜன-202011:56:53 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நல்ல ஆலோசனை நம் நாட்டின் கலாச்சாரத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
17-ஜன-202021:23:57 IST Report Abuse
Poongavoor Raghupathy Swamy calling himself a great economist suggesting to have Lakshmi print in currencies is highly superstitious. If Swamy suggested to put all efforts to improve our currency notes with constructive efforts and then to print Lakshmi on Notes to retain our currency level on high note is more meaningful. This shows Swamy does not have any confident ideas to improve our Currency and seeks Lakshmi on notes with superstition. I do not know why Swamy is degrading himself in the eyes of Public with blind ideas.Lakshmi rewards only when we put our efforts and not by printing Lakshmi on currency notes.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
17-ஜன-202021:09:09 IST Report Abuse
தமிழ்வேள் என்ன காரணம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X