கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குளங்களில் ஆக்கிரமிப்பு தாசில்தார் அறிக்கை தாக்கல்

Added : ஜன 16, 2020
Advertisement

சென்னை :திருவாரூர் மாவட்டத்தில், ௩௨ குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், 13 குளங்கள் குறித்த அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த, வழக்கறிஞர் ஆர்.கே.அய்யப்பன் தாக்கல் செய்த மனு:திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள, 32 குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதை அகற்றும்படி, அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுள்ளேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்கிரமிப்பால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. மழை காலத்தில், கிராமங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு குறித்து, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஜராகி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், '௩௨ல், ௧௩ குளங்களுக்கு நில அளவை செய்யப்பட்டது. மீதி, ௧௯ குளங்களின் அளவீடுகள் நடக்கின்றன. குளங்களை சுற்றி நஞ்சை நிலம் உள்ளதால், அறுவடைக்கு பின், நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகள் அறியப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, விசாரணையை, பிப்., ௩க்கு தள்ளி வைத்து, தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X