சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் அலைக்கழிப்பு முதல்வருக்கு விவசாயிகள் கடிதம்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : 'நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இப்பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர்.இதுகுறித்து, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் அனுப்பியுள்ள கடிதம்:வீட்டில் இருந்த பொருட்களை அடகு வைத்து, கடன் வாங்கி, விவசாயிகள் பயிர் செய்தனர். நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. விவசாயிகளிடம் கொடுத்த பணத்தை, வட்டியுடன் வசூல் செய்ய, பணம் கொடுத்தவர்கள், வாசலில் தயாராக நிற்கின்றனர். ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.
பல இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள், இன்னும் செயல்படவில்லை. நெல் எடை போட, அலுவலர்கள் வரவில்லை; வாகனங்கள் வரவில்லை; போதுமான சாக்குப் பைகள் இல்லை என, அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர்.
மேலும், 40 கிலோ மூட்டைக்கு, 30 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. குவின்டாலுக்கு என கணக்கிட்டால், 75 ரூபாய் வரைக்கும் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் நெல் கொள்முதல் விலையாக, குவின்டாலுக்கு, 70 ரூபாய் மட்டுமே, அரசால் உயர்த்தி வழங்கப்படுகிறது. அதையும் மறைமுகமாக பிடித்தம் செய்வதால், விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை.
இதனால், விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நெல் அளக்க பணம் கேட்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு, மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, உரிய உத்தரவை, முதல்வர் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.***

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
17-ஜன-202010:20:26 IST Report Abuse
Ramachandran Rajagopal நேரடி கொள்முதல் நிலையங்களில் சட்டவிரோதமாக வசூலிக்கும் தொகையில் அனைவருக்கும் பங்குண்டு என்பதால் யாரும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.மாறாக கமிஷன் கொடுக்க மறுப்பவர்கள் நெல்லை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பார்கள்.அந்த கமிஷனுக்காகத்தான் மத்திய அரசு நிர்ணயித்த தொகைக்கு மேலாக வழங்குகின்றனர்.விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறுவது கண்துடைப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X