அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவி உடையுடன் திருவள்ளுவர் படம் 3 முறை வாழ்த்திய துணை ஜனாதிபதி

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (2)
Advertisement


திருவள்ளுவர் தின வாழ்த்து கூறுவதற்காக, காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக, அப்படத்தை துணைஜனாதிபதி அலுவலகம், உடனடியாக, நீக்க நேர்ந்தது.
திருவள்ளுவருக்கு, காவி உடையணிவித்து, அவரது படத்தை, தமிழக பா.ஜ., சார்பில் வெளிடவே, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியும், பா.ஜ., உள்பட இந்து அமைப்புகள், அதே படத்தை, இன்னும் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அவரது டிவிட்டர் பக்கத்தில் அதிகாலை 6 மணிக்கெல்லாம், வாழ்த்து செய்தி வெளியாகியிருந்தது.

ஆங்கிலத்தில் இருந்த அந்த செய்தியுடன் சேர்த்து வெளியிடப்பட்டிருந்த படத்தில், திருவள்ளுவர் காவி உடை தரித்து, நெற்றியில் விபூதி,ருத்திராட்ச மாலை அணிந்து காணப்பட்டார்.
தமிழகத்தில், சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அதே படம் என்பதால், உடனடியாக டிவிட்டர் முழுக்க எதிர்ப்புகள் குவிய ஆரம்பித்தன. குறிப்பாக, தர்மபுரி தொகுதி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார், உடனடியாக, அச்செய்தியை டேக் செய்து, கடும் எதிர்ப்பை, பதிவு செய்தார்.
அதில்,‛‛ இச்செயல் சரியானது அல்ல. தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துமாறு, தயவு கூர்ந்து, துணைஜனாதிபதி அலுவலகத்தை, கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் பயன்படுத்தியுள்ள படம், மதம் மற்றும் ஜாதி ரீதியாக காவிமயமாக்கப்பட்டது என்பதால், இதை, உடனடியாக நீக்க வேண்டும். காரணம், திருவள்ளுவர் என்பவர் பொதுவானவர். அனைவராலும் போற்றப்படுகிறவர்'' என, கூறியிருந்தார்.
இவர், சிட்டிங் எம்.பி., என்பதால், இந்த பதிவை, உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட துணை ஜனாதிபதி அலுவலகம், 10 மணிக்கு, மீண்டும் தமிழில்,‛‛ சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவ வாதியும், ஞானியுமான, திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில், நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு, மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது.
அறநெறி, மாண்புகள், தார்மீக நெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில், மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து, நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல், எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது'' என, குறிப்பிட்டு டிவிட்டர் செய்தி வெளியிட்டது.
அதில், வெள்ளை உடையில், வழக்கமான திருவள்ளுவர் படம், இடம்பெற்றிருந்தது. மேலும் ‛ அலுவலக ஊழியரின் கவனக்குறைவால், தவறுதலாக, முந்தைய பதிவு இடம்பெற்று விட்டது. தவறை சுட்டிக்காட்டியவுடன், அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது' என்றும், குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்பிறகும், 3 வது முறையாக, வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டது. அதில், வெள்ளை உடை தரித்த வழக்கமான திருவள்ளுவர் படத்துடன் கூடிய ஆங்கில வாழ்த்துச் செய்தி, மீண்டும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தமிழில் வாழ்த்து

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில்,‛‛ திருவள்ளுவர் திருநாளில், அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும், இலக்கிய படைப்புகளும், பல கோடி மக்களுக்கு, இன்னும் வலிமையை வழங்குகின்றன. சமூகநீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி, நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன'' என, குறிப்பிட்டுள்ளார்.நமது டில்லி நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SankarVaithee - Bangalore,இந்தியா
18-ஜன-202015:19:38 IST Report Abuse
SankarVaithee சமீபத்தில் நான் வள்ளுவரின் ஞான வெட்டியான் பற்றி அறிந்து உள்ளேன். இந்த நூலில் மிக தெளிவாக வள்ளுவனார் முழு முதற் கடவுளாக பிள்ளையாரையும் தமிழ் கடவுளான முருக பெருமானையும் வணங்குகிறார். மேலும் யோகா சாஸ்திர முறைப்படி எளிதியுள்ள குண்டலினி போன்றவரையும் ஜாதி மற்றும் வர்ணாஸ்ரமத்தையும் பற்றி எழுதியுள்ளார். இந்த நூல் உபநிஷதத்தின் சாரம் என்று கூறும் ஸ்ரீமத் பகவத் கீதை நூலை உரித்து வைத்திருக்கிறது. ஆகையால் என்ன செய்ய சொல்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
SankarVaithee - Bangalore,இந்தியா
18-ஜன-202000:57:45 IST Report Abuse
SankarVaithee திருவள்ளுவருக்கு இப்போதுதான் இந்தியா அளவிலுள்ள தாள்வைர்களும் அகில உலக அளவில் உள்ள தலைவர்களும் மகிமை அறிந்து பாராட்டி விழா எடுக்கிறார்கள். ஆடை பற்றி சண்டை போடும் தமிழ் அறிவு ஜீவிகள் தங்கள் இதயம் தொட்டு கேளுங்கள் எவ்வளவு வள்ளுவரை பற்றி தெரியும் என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X