கூட்டத்தில் புகுந்த கார் 4 பெண்கள் பரிதாப பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டத்தில் புகுந்த கார் 4 பெண்கள் பரிதாப பலி

Added : ஜன 16, 2020

தஞ்சாவூர்,: ஜெபக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த, நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சாவூர், திருமலைச்சத்திரத்தில், ஆத்துமநேசர் தேவாலயம் - பரிசுத்த பரிவதம் என்ற ஜெபக்கூடம் உள்ளது. பொங்கலையொட்டி, நேற்று முன்தினம் மாலை, இங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் பங்கேற்க, தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.இதில், 30க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் மாலை, வல்லம்புதுார் குளத்தில் குளித்தனர். பின், தஞ்சாவூர் - திருச்சி பைபாஸ் சாலையில், சர்வீஸ் ரோட்டில் நடந்து, ஜெப கூடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது, திருச்சியில் இருந்து தஞ்சை வந்த அம்பாசிடர் கார், கட்டுப்பாட்டை இழந்து, நடந்து சென்றவர்கள் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கார் மோதியதில், பெங்களூரைச் சேர்ந்த, கவிதா, 25, என்ற பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கவிதாவின் தாயார் கன்னியம்மாள், 48, பெங்களூரைச் சேர்ந்த செல்வி, 45, இவரது மகள் கீர்த்தி, 22, ஆகியோர் படுகாயமடைந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.காரை ஓட்டி வந்த, திண்டுக்கல்லைச் சேர்ந்த சத்தியநாராயணன், 27, காரில் பயணம் செய்த இவரது தந்தை, தாய் ஆகியோரும் படுகாயமடைந்து, சிகிச்சையில் உள்ளனர். ***

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X