இன்றும், நாளையும் மழை பெய்யும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் மழை பெய்யும்

Added : ஜன 16, 2020


சென்னை,:இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், முன் பனிக்காலம் நிலவுகிறது. இரவு முதல் காலை வரை, பெரும்பாலான இடங்களில் பனி மூட்டம் காணப்படுகிறது. ஒரு வாரத்துக்கு மேலாக, மாநிலம் முழுவதும் மழை நின்று, வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மையம் கூறியுள்ளதாவது:தென் மேற்கு வங்க கடலில், இலங்கை மற்றும் கன்னியாகுமரி இடையில் ஏற்பட்டுள்ள, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி, தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவியுள்ளது; மழை பதிவாகவில்லை. காலை நேர குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 5 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்துள்ளது. மிக குறைந்தபட்சமாக, குன்னுாரில், 8 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே, வெப்பநிலை பதிவாகியுள்ளது.இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.***

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X