எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்?

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (42)
Advertisement
 தமிழக ,பா.ஜ., தலைவர், நயினார்,நாகேந்திரன்?, டில்லியில் அறிவிப்பு

நீண்ட இழுபறிக்கு பின், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை, தமிழக பா.ஜ., தலைவராக நியமிப்பதற்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர், அ.தி.மு.க.,விலிருந்து, 2017ல் பா.ஜ.,வில் சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு செப்., மாதம், தெலுங்கானா மாநில கவர்னராக, தமிழிசை நியமிக்கப்பட்டதும், அவர் வகித்த, தமிழக பா.ஜ., தலைவர் பதவி காலியாகவே இருந்து வருகிறது. அப்பதவியை கைப்பற்ற, தமிழக பா.ஜ.,வில் கடும் போட்டி ஏற்பட்டது.

பா.ஜ., தேசிய இணை அமைப்பு பொதுச்செயலர் சிவபிரகாஷ், தேசிய செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் எம்.பி. ஆகியோர், அடுத்த தலைவரை யாரை தேர்வு செய்வது குறித்து, மாநில நிர்வாகிகள், 70 பேரிடம், சமீபத்தில் கருத்து கேட்டனர்.நிர்வாகிகள் தெரிவித்த கருத்து அடிப்படையில், 11 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து, டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், நயினார் நாகேந்திரன், குப்புராம், மதுரை சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

ஏற்கனவே, தமிழக பா.ஜ., தலைவராக பிராமணர், கவுண்டர், ஆதி திராவிடர், நாடார் சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நயினார் நாகேந்திரன் பெயரை, இன்று அதிகாரப்பூர்வமாக, டில்லி மேலிடம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.


தி.மு.க., கூட்டணி?



சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில், நயினார் நாகேந்திரனும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பு நடந்த, சில தினங்களில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, ஸ்டாலினை விமர்சித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வௌியிட்டார்.

அந்த அறிக்கையால், அதிருப்தி அடைந்த ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டிய கூட்டத்தை புறக்கணித்தார்.

இதற்கிடையில், டில்லி மேலிடத்தில், 'என்னை தலைவராக நியமிக்கும்பட்சத்தில், தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., என, ஓட்டு வங்கி பலம் உள்ள கட்சிகளை இணைத்து, மெகா கூட்டணியை உருவாக்குவேன்' என, நயினார் நாகேந்திரன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.


ஜல்லிக்கட்டு ஹிந்து பண்டிகை!


'டுவிட்டர்' பக்கத்தில், தமிழக பா.ஜ., கூறியிருப்பதாவது:

அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க, சிவன், வேடுவன் வடிவத்தில், அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது, இறைவனை தழுவுகிற வாய்ப்பு, அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது. இந்த நிகழ்வை கொண்டு, சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை, ஹிந்துக்கள் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, அவரையும், அவ்வையாரையும், காவி உடை அணிந்த ஓவியமாக வரைந்து, தமிழக பா.ஜ., வௌியிட்டுள்ளது. காவி விவகாரத்திற்கும், ஹிந்துக்கள் பண்டிகை ஜல்லிக்கட்டு என்ற பா.ஜ., கருத்துக்கும், தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202004:33:29 IST Report Abuse
J.V. Iyer 'மச்சான்ஸ்' நமீதா அல்லவா எங்கள் தலைவி??
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜன-202011:15:32 IST Report Abuse
இந்தியன் kumar திமுக அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் இவர்கள் கட்சியின் மாவட்ட செயலர்கள் முன்னாள் இந்நாள் அமைச்சர்களின் சொத்துக்கள் நிரூபிக்கும் இருவரையும் நிராகரிக்க வேண்டும் , கழகங்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜன-202011:13:12 IST Report Abuse
இந்தியன் kumar திமுக அதிமுகவுடன் கூட்டணி சேர்வதை எந்த உண்மையான பாஜக தொண்டனும் விரும்பமாட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X