பொது செய்தி

இந்தியா

மாற்றுத் திறனாளி மாணவர்கள் மோடியுடன் கலந்துரையாட தேர்வு

Added : ஜன 16, 2020
Advertisement


புதுடில்லி : தேர்வு நேர மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், மாணவர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, வரும், 20ல், டில்லியில் நடக்கிறது. இதில் முதன் முறையாக, மாற்றுத் திறனாளி மாணவர்கள், 50 பேர் பங்கேற்கவுள்ளனர். தேர்வு நேரத்தின் போது, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மன அழுத்தத்தை குறைப்பது குறித்து, பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. மூன்றாவது ஆண்டாக, வரும், 20ம் தேதி, டில்லி தாலகடோரா விளையாட்டரங்கில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து, பல்வேறு போட்டிகள் மூலம், 2,000 மாணனவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியின்போது, மாணவர்கள், பிரதமர் மோடியிடம், தேர்வு எழுதுவது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், முதல் முறையாக, நாடு முழுவதும் இருந்து, மாற்றுத் திறனாளி மாணவர்கள், 50 பேர் பங்கேற்கவுள்ளனர். இவர்களும், பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவர். 'தேர்வின்போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி' என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள், பிரதமர் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X