ராஜஸ்தான் முதல்வருக்கு 'பிரஸ் கவுன்சில்', நோட்டீஸ்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுடில்லி :ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக கூறி, 'இந்திய பிரஸ் கவுன்சில்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கே, கடந்த மாதம், 16ல், நிருபர்களை சந்தித்த அசோக் கெலாட், 'உங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைக்க வேண்டும் என்றால், எங்கள் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்ப வேண்டும்; வெளியிட வேண்டும்' என்றார்.

ராஜஸ்தான் முதல்வரின் இந்தப் பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, இந்திய பிரஸ் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பிரஸ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராஜஸ்தான் முதல்வரின் பேச்சு, ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதமாக உள்ளது. ஊடகங்களின் நம்பக்தன்மை, சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. இது பற்றி, விளக்கம் கேட்டு, ராஜஸ்தான் தலைமை செயலருக்கு, 'நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X