ஏர் ஏஷியா சி.இ.ஓ.,க்கு அமலாக்கத் துறை 'சம்மன்'

Added : ஜன 16, 2020
Advertisement

புதுடில்லி :சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ஏர் ஏஷியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டோனி பெர்னான்டஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு, அமலாக்கத் துறை 'சம்மன்'அனுப்பியுள்ளது. ஏர் ஏஷியா நிறுவன அதிகாரிகள், மத்திய அரசின் கொள்கைகளை தவறாக பயன்படுத்தி, ஊழல் மூலம், ஏர் ஏஷியா இந்தியா நிறுவனத்திற்கு, சர்வதேச விமான சேவை உரிமம் பெற முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுஉள்ளது.

இது தொடர்பாக, குற்றப் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ஏர் ஏஷியா இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது, 2018ல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தற்போது, இவ்வழக்கு தொடர்பாக டோனி பெர்னான்டஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வரும், 20ம் தேதி, டோனி பெர்னான்டஸ், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இதர அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X