'எல் அன்ட் டி' உருவாக்கிய வஜ்ரா பீரங்கி ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பு

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 'எல் அன்ட் டி' உருவாக்கிய வஜ்ரா பீரங்கி  ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பு

ஹசீரா :குஜராத்தில் உள்ள, 'எல் அன்ட் டி' நிறுவனத்தின், பாதுகாப்பு உபகரணங்கள் செய்யும் வளாகத்தில் உருவாக்கப்பட்ட, 51வது 'கே.9 வஜ்ரா டி' ரக பீரங்கி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

விநியோகம்
கடந்த, 2017ல், 'எல் அன்ட் டி' எனப்படும், 'லார்சன் அன்ட் டூப்ரோ' நிறுவனம், ராணுவ அமைச்சகத்துடன், 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ராணுவத்திற்கு, 100 'கே.9 வஜ்ரா டி' ரக பீரங்கிகளை, 42 மாதங்களில் விநியோகம் செய்வது என, முடிவு எடுக்கப்பட்டது. 50 டன் எடையுள்ள வஜ்ரா பீரங்கி, 43 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை, 47 கிலோ எடையுள்ள குண்டு களை வீசி, தாக்கும் திறன் கொண்டது.

மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் போடப்பட்ட இந்த ஒப்பந்தம்தான், தனியார் நிறுவனத்திற்கு மத்திய ராணுவ அமைச்சகத்தால் போடப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.இந்நிலையில், குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் உள்ள 'எல் அன்ட் டி' நிறுவனத்தின், பாதுகாப்பு உபகரணங்கள் செய்யும் வளாகத்தில் உருவாக்கப்பட்ட, 51வது வஜ்ரா பீரங்கி, ராணுவ அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பூஜை
அதனை, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று பெற்றுக்கொண்டார். அந்த பீரங்கியில், குங்குமம் இட்டு, “ஸ்வஸ்திக்” சின்னம் வரைந்து, பூக்களால் ராஜ்நாத் சிங் பூஜை செய்தார்.பின், அந்த பீரங்கியில் ஏறி அமர்ந்து, வலம் வந்த, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, 'எல் அன்ட் டி' அதிகாரிகள், அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-ஜன-202016:09:50 IST Report Abuse
ஆரூர் ரங் பீரங்கியில், குங்குமம் இட்டு, “ஸ்வஸ்திக்” சின்னம் வரைந்து, பூக்களால் ராஜ்நாத் சிங் பூஜை செய்தார். அட இது பாகிஸ்தானிய சிறுபான்மையினருக்கு எதிரானது என சுடலை அறிக்கைவிடுவார்
Rate this:
Share this comment
Cancel
Thamilarasu K - Salem,இந்தியா
17-ஜன-202011:56:28 IST Report Abuse
Thamilarasu K அருமை, இது போன்று இன்னும் பல கருவிகளை நாம் உருவாக்கினால், வேலை வாய்ப்பு அதிகமாகும், வெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யலாம்... அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாகும், போர் தளவாடங்கள் உற்பத்தி செய்வதில்தான் இன்ஜினியரிங் தொழில் நுட்பம் வளர ஆரம்பித்து, பிற்பாடு பொதுமக்கள் உபயோகத்திற்காக வந்தது... தகவல் தொடர்பு, GPS போன்றவை இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்து பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவையே...
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
17-ஜன-202010:56:55 IST Report Abuse
karutthu இந்த புதிய பீரங்கி வண்டி இந்த வருட குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளுமா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X