ஒடிசாவில் ரயில் விபத்து 15 பேர் படுகாயம்

Added : ஜன 16, 2020
Advertisement


புவனேஸ்வர், : ஒடிசாவில், பயணியர் ரயில், சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 15 பேர் படுகாயம் அடைந்தனர். ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பையில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்து கொண்டிருந்த, லோகமான்ய திலகர் விரைவு ரயில், கட்டாக் அருகே, சரக்கு ரயிலின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. சலாகன் - நெர்கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே நடந்த இந்த விபத்தில், பயணியர் ரயிலின் எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டன. இதில், 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த பயணியருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து, கிழக்கு கடலோர ரயில்வே செய்தி தொடர்பாளர், ஜே.பி.மிஸ்ரா கூறியதாவது:

விபத்து நடந்த போது, கடும் பனி மூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதான் விபத்துக்கு காரணமா என, தெரியவில்லை. விசாரணைக்காக, இரண்டு ரயில்களின் வேகமானி கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயணிகளை, கட்டாக், புவனேஸ்வர் கொண்டு செல்ல, பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.இந்த விபத்து காரணமாக புவனேஸ்வர் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஐந்து ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

இதனிடையே, மத்திய ரயில்வே, விபத்து குறித்த விபரங்களை, ரயில் பயணியரின் உறவினர்கள் அறிந்து கொள்ள வசதி செய்துள்ளது. இதற்காக, மும்பை, தானே, கல்யாண் உள்ளிட்ட ஐந்து ரயில் நிலையங்களில், உதவி மையங்கள் அமைத்து, அவற்றுக்கான தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X