உண்மை நிலவரம்

Added : ஜன 16, 2020
Advertisement

உண்மை நிலவரம்



ஜம்மு - காஷ்மீரில், நிலைமை சீராக உள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். அப்படியானால், எதற்காக, 36 மத்திய அமைச்சர்களை அங்கு அனுப்புகிறீர்கள். அவர்கள் அங்கு சென்று வந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்கள். உங்களுக்கு எதிராக பேசுபவர்களயும் அங்கு அனுப்பினால் தானே, உண்மையான நிலவரம் வெளியே தெரிய வரும். கபில் சிபல்மூத்த தலைவர், காங்.,
இனப்படுகொலை

டில்லியில், 1984ல் நடந்த கலவரம், சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்றும், அதை செய்தவர்களை, காங்கிரஸ் அரசு பாதுகாத்து வந்தது என்றும், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அறிக்கை தெரிவிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் முதல் சாம் பிட்ரோடா வரை, இந்த கலவரத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர்.பிரகாஷ் ஜாவடேகர்மத்திய தகவல் - ஒளிபரப்புத்துறை அமைச்சர்

மரியாதை மீறல்

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மாநில கவர்னரின் ஒப்புதல் இன்றி, உச்ச நீதிமன்றத்தில், கேரள அரசு மனு செய்தது, நெறிமுறை மற்றும் மரியாதை மீறலாகும். அவர்கள் செய்தது தவறு என்று நான் கூறிவில்லை. அதற்கு உரிமை உள்ளது. ஆனால், அரசியலமைப்புத் தலைவராக இருக்கும் எனக்கு, அவர்கள் முதலில் தகவல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்திரிகைகள் மூலம் அதைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். ஆரிப் முகமது கான்கேரள கவர்னர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X