தூக்கை எதிர்த்து முஷாரப் வழக்கு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தூக்கை எதிர்த்து முஷாரப் வழக்கு

Added : ஜன 16, 2020


இஸ்லாமாபாத் :தேசவிரோத வழக்கில் தூக்கு தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யும்படி, பாக்., உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், 74 வழக்கு தொடர்ந்துள்ளார்.நமது அண்டை நாடான பாக்.,கின் முன்னாள் அதிபரான முஷாரப், 2007ல், நாட்டின் அவசரநிலையை பிரகடப்படுத்தினார். அப்போது, பல நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்; பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில், முஷாரப் மீது, 2013ல், தேச விரோத வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த, இஸ்லாமாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றம், முஷாரபுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பு அளித்தது.சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என, அறிவிக்கக் கோரி, லாகூர் உயர் நீதிமன்றத்தில் முஷாரப் வழக்கு தொடர்ந்திருந்தார். 'சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம்' என, உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, முஷாரப் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'நீதிமன்றம் நினைக்கும் வேறு நிவாரணத்தையும் வழங்க வேண்டும்' என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது, மேற்கு ஆசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், முஷாரப் தஞ்சமடைந்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X