2024க்குப் பிறகும் அதிகாரம்: ரஷ்ய அதிபர் புடினின் திட்டம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020
Advertisement
2024க்குப் பிறகும் அதிகாரம்: ரஷ்ய அதிபர் புடினின் திட்டம்

மாஸ்கோ :தற்போது ரஷ்ய அதிபராக உள்ள விளாதிமிர் புடின், 2024ல் பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதன் பிறகும், நாட்டின் அதிகாரம் கையில் இருக்கும் வகையில், மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.

கடந்த, 1999ல் இருந்து, ரஷ்யாவின் அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில், விளாதிமிர் புடின், 67, தொடர்ந்து இருந்து வருகிறார். தற்போது நான்காவது முறையாக அதிபராக உள்ள அவருடைய பதவிக் காலம், 2024ல் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டின் பார்லி.,யில் பேசிய அவர், 'அதிபருக்கான அதிகாரத்தை குறைத்து, பார்லி.,க்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும்' என, அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த டிமித்ரி மேட்வடேவ், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய பிரதமராக, அதிக அறிமுகம் இல்லாத மிக்கைல் மிசுஸ்தின் பெயரை அவர் பரிந்துரை செய்தார். அவர் போட்டியின்றி, பார்லிமென்ட்டின் கீழ் சபையில், தேர்வு செய்யப்பட்டார். ஓட்டெடுப்பை, கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணித்தனர்.இன்ஜினியராக இருந்து, பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் மிசுஸ்தின். நாட்டின் வரி சேவைப் பிரிவின் தலைவராக இருந்தவர். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து, நிபுணர்கள் கூறியதாவது:அரசியலமைப்பு சட்டத்தின்படி, 2024க்குப் பிறகு, அதிபர் பதவியில் புடின் தொடர முடியாது. அதே நேரத்தில், நாட்டின் அதிகாரமிக்க தலைவராக தொடருவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அதன்படி, அதிக அதிகாரம் உள்ளதாக பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளார். அதிபர் பதவிக்காலம் முடிந்த உடன், அவர் பிரதமராவதற்காக இதை செய்து வருகிறார் என, கருதப்படுகிறது.அடுத்த சில நாட்களில், புடின் எடுக்க உள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகே, இதை உறுதியாக கூற முடியும். ஆனால், நாட்டின் அதிகாரமிக்கப் பதவியில் தொடர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.அதனால் தான், பிரதமர் பதவியில், அரசியல் அனுபவம் இல்லாத, தன் ஆதரவாளரை அவர் நியமித்துள்ளார். அதேபோல் டிமித்ரி மேட்வடேவும், புடினுக்கு சாதகமானவர். புடின் பிரதமராக இருந்தபோது, மேட்வடேவ் அதிபராக இருந்தார். இவ்வாறு இருவரும் மாறி மாறி, அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். அதனால், அவருக்கும் புதிய மாற்றங்களில், மரியாதைக்குரிய பதவி கிடைப்பதை புடின் உறுதி செய்வார் என்பதை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X