பொது செய்தி

இந்தியா

'டெபிட், கிரெடிட்' கார்டுகளுக்கு 'ஆன் - ஆப்' வசதி: ரிசர்வ் வங்கி உத்தரவு

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
'டெபிட், கிரெடிட்' கார்டுகளுக்கு  'ஆன் - ஆப்' வசதி: ரிசர்வ் வங்கி உத்தரவு

மும்பை :'வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள் வழங்கும், 'டெபிட், கிரெடிட்' கார்டுகளில், 'ஆன் அல்லது ஆப்' செய்யும் வசதி, அதாவது விரும்பும்போது, கார்டை இயக்க அல்லது முடக்கும் உரிமையை, கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.கடைகள் அல்லது வலைதளங்களில் பொருட்களை வாங்க, ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க, பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் செலுத்த என, ஏராளமான பரிவர்த்தனைகளுக்கு, டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுகின்றன. இவற்றின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிகளும் பெருகி வருகின்றன.

இதைத் தடுக்க, கார்டுதாரருக்கு தேவைப்படும் போது, டெபிட் கார்டு பயன்பாட்டை அனுமதிக்கவும், தேவைப்படாத போது, பயன்பாட்டை நிறுத்தி வைக்கவும் வசதி செய்து தர வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.இணையம் வாயிலான, உள்நாடு மற்றும் வெளிநாடு பரிவர்த்தனைகளில், கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தாமல், அவற்றின் பின்புறம் உள்ள, சி.வி.வி., எண்கள் மூலம் பணம் செலுத்தலாம்.
இத்தகைய முறையிலும், வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் போது, கார்டுகளின் இயக்கத்தை அனுமதிக்கவும், தேவைப்படாத போது, முடக்கி வைக்கவும் வசதி செய்து தரப்பட வேண்டும்.டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம், ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பை, வங்கிகள் நிர்ணயிக்கின்றன. வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த வரம்பை குறைத்து நிர்ணயிக்கும் வசதியை, வங்கிகள் வழங்க வேண்டும். மொபைல் போன், இணையம், ஏ.டி.எம்., இயந்திரங்கள் மற்றும் குரல் வழியிலான வங்கிச் சேவை உள்ளிட்ட அனைத்திலும், டெபிட், கிரெடிட் கார்டுகளை தேவைப்படும் போது பயன்படுத்தவும், தேவைப்படாத போது முடக்கி வைக்கவும் உரிய வசதியை வங்கிகள் வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-202016:55:17 IST Report Abuse
prabhu icici bank credit cardku provide panni irunkanga.imobile app la iruku
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-ஜன-202014:04:47 IST Report Abuse
Dr. Suriya இதையும் ..நாங்கள் வங்கியிலிருந்து பேசுகின்றோம் என்று சொல்லி OTP எண்ணை கேட்டு பெறுவதுபோல் on அல்லது off செய்ய சொல்லிவிடுவார்கள் இந்த மோசடி கும்பல்.... ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு அழைக்க பொதுவான போன் நம்பர் இருப்பதைப்போல் வங்கியிலிருந்து அழைப்பவர்களுக்கும் பொதுவான நம்பர் இருந்தால் வாடிக்கையாளர்கள் இது வங்கியிலிருந்து வரும் கால் தான் என்று நம்புவார்களே .... வங்கிகள் இதை செய்யலாமே....
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
17-ஜன-202013:55:08 IST Report Abuse
M S RAGHUNATHAN If a person has only an ATM/debit card and DOES NOT HAVE A MOBILE PHONE HOW THE OTP CAN BE SENT AND RECEIVED. IT IS NOT MANDATORY THAT EVERY PERSON A BANK ACCOUNT SHOULD HAVE MOBILE PHONE. HOW RBI PROPOSES TO ADDRESS THIS ISSUE
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X