நிதிஷ் தலைமையில் சட்டசபை தேர்தல்: அமித் ஷா திட்டவட்ட அறிவிப்பு

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
நிதிஷ், நிதிஷ்குமார், அமித்ஷா, பீஹார், சட்டசபைதேர்தல்,

வைஷாலி, :'பீஹார் சட்டசபை தேர்தலை, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், தே.ஜ., கூட்டணி சந்திக்கும்' என, பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், இந்த ஆண்டு அக்டோபரில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், வைஷாலி மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது:மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு, அமோக ஆதரவு தெரிவித்துள்ள மாநிலங்களில், பீஹாரும் ஒன்று. இந்த சட்டத்துக்கு, மக்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
இந்த சட்டம் குறித்து, சிறுபான்மையினரை, எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. ஓட்டு வங்கி அரசியலுக்காக, வன்முறையை துாண்டுகின்றனர். இந்த சட்டத்தால், யாருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது.
இந்த ஆண்டு, பீஹார் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்குள்ளேயே, தே.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். தே.ஜ., கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலேயே, தே.ஜ., கூட்டணி சட்டசபை தேர்தலை சந்திக்கும்.ஊழல் செய்து, சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத், தன் கூட்டணி, ஆட்சியைப் பிடிக்கும் என, கனவு காண்கிறார். ஆனால், பீஹாரை லாந்தர் விளக்கு காலத்திலிருந்து, எல்.இ.டி., பல்ப் காலத்துக்கு, தே.ஜ.கூட்டணி மாற்றி விட்டது என்பதை, லாலு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
20-ஜன-202016:06:58 IST Report Abuse
unmaitamil பிஜேபி யுடன் கூட்டணிக்கு நிதிஷ் இருக்கிறார். காண்கிராஸுக்கு எவனும் இல்லை. பாவம் அநாதை.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-ஜன-202009:51:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தனியா நின்னா டப்பா டான்ஸ் ஆடிரும்ன்னு சாணக்கியருக்கு தெரியும்.
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
17-ஜன-202008:43:48 IST Report Abuse
Vijay 'பீஹார் சட்டசபை தேர்தலை, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், தே.ஜ., கூட்டணி சந்திக்கும்'
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X