பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடிய சென்னை சாலைகள்

Added : ஜன 16, 2020
Advertisement


சென்னை :பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு, பலரும் சொந்த ஊர் சென்றுள்ளதால், சென்னை சாலைகள் வெறிச்சோடியுள்ளது.
தொழில் மற்றும் அலுவலக பணி காரணமாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சென்னையில் தங்கியுள்ளனர். புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சென்னையில் உள்ளனர்.
கல்வி காரணமாக, ஏராளமான மாணவ - மாணவியரும், விடுதிகள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, தற்போது தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை மற்றும் விடுமுறையை கொண்டாட, மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால், காலை முதல் நள்ளிரவு வரை பரபரப்பாக இருக்கும் ஜி.எஸ்.டி., சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.என்.டி., சாலை, நுாறடிச்சாலை உட்பட, முக்கிய சாலைகளிலும், இரண்டு நாட்களாக வாகன நடமாட்டம் குறைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகளிலும், வாகனங்கள் இல்லை. இதனால், வாகன நெரிசல் இன்றி, விரைவாக பலரும் சென்னையில் பயணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X