அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் வீட்டில் மாட்டு பொங்கல்

Added : ஜன 16, 2020
Advertisement

சென்னை :தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீட்டில், மாட்டுப் பொங்கல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.சென்னை, சாலிகிராமத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீடு உள்ளது. இங்கு, பசு மாடுகள் மற்றும் கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. மாட்டு பொங்கல் விழாவை ஒட்டி, விஜயகாந்த் வீட்டில் உள்ள பசுக்கள் மற்றும் கன்றுகள் அலங்கரிக்கப்பட்டன.
மாடுகளுக்கு கரும்பு, அச்சு வெல்லம் ஊட்டி, விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர், மாட்டு பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். பசுக்கள் மற்றும் கன்றுகளுடன், அவர்கள் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X