700 பஞ்சாயத்துகளில் மது விற்கத் தடை

Added : ஜன 16, 2020
Advertisement


சண்டிகர், ஹரியானாவில் உள்ள, 700க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், தங்கள் கிராமங்களில் மது விற்பனையை தடை செய்வதற்கான தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கிராமங்களில், மது விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.கிராமங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும் என்றால், கிராம பஞ்சாயத்துகளில், அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என, மாநில அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள, 700க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், மது விற்பனையை தடை செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அறிக்கைகள், மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.இந்த தீர்மானங்களின்படி, குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள மது விற்பனையாளர்களுக்கு தடை விதிக்கப்படும். தற்போது 2,500 ஆக இருக்கும் மது விற்பனையாளர்களின் எண்ணிக்கை, 2020 - 2021 நிதியாண்டில், 1,800 ஆக குறைந்துவிடும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X