தொலை தொடர்பு நிறுவனங்களின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி:'ஏர்டெல், ரிலையன்ஸ்' உட்பட, பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து, 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவை தொகையை வசூலிக்க, மத்திய அரசுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற உத்தரவை, மறு ஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தேசிய அளவிலான புதிய தொலைத்தொடர்பு கொள்கை, 1999ல் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும், ஏ.ஜி.ஆர்., எனப்படும், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில், ஒரு குறிப்பிட்ட தொகையை, ஆண்டு லைசென்ஸ் கட்டணமாக, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.
இதைத் தவிர, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப, பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏ.ஜி.ஆர்., குறித்த புதிய விளக்கம் உருவாக்கப்பட்டது.
அதன்படி, மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர, மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும், ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும். ஆனால், இதை எதிர்த்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நிலுவை தொகையினை வசூலிக்க, மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாபோன் - ஐடியா உட்பட, பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள், வட்டியுடன் சேர்த்து, மத்திய அரசுக்கு, 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவானது.
உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி, தொலை தொடர்பு நிறுவனங்கள் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.ஏ.நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக, ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஜன-202014:06:32 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN சரியான தீர்வு அரசுக்கு செலுத்திடனும் வருவாய் வந்த தல்ல வரி செலுத்திடனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X