பொது செய்தி

இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்பு டில்லியில் இன்று ஆலோசனை

Added : ஜன 16, 2020
Advertisement


புதுடில்லி :மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது.
ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, மக்கள்தொகை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு முன், மக்களிடையே தகவல்களை சேகரிக்கும், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அதன்படி, வரும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான, தகவல்கள் சேகரிக்கும், என்.பி.ஆர்., எனப்படும் மக்கள்தொகை பதிவேடு விபரங்கள் சேகரிக்கும் பணி, இந்தாண்டு நடக்க உள்ளது. வரும், ஏப்., 1 முதல், செப்., 30 வரை இந்த தகவல் சேகரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில், டில்லியில் இன்று நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், மாநில மக்கள்தொகை இயக்குநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கும் நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கும், பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
'இந்தக் கணக்கெடுப்பை எங்களுடைய மாநிலத்தில் நடத்த மாட்டோம்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 'இந்த ஆலோனை கூட்டத்திலும் பங்கேற்க மாட்டோம்' என, அவர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X