பொது செய்தி

இந்தியா

நீரை சேமித்தால் பணம் டில்லி காங்., வாக்குறுதி

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020
Advertisement

புதுடில்லி: “டில்லியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 20 ஆயிரம் லிட்டர் நீர், இலவசமாக விநியோகம் செய்யப்படும். ஒரு லிட்டர் நீரை சேமித்தால், 30 பைசா வழங்கப்படும்” என டில்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா வாக்குறுதி அளித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு, வரும் பிப்ரவரி 8ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டில்லி மாநில காங்., தலைவர் சுபாஷ் சோப்ரா இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஆம் ஆத்மி அரசு, எந்த கணக்கீடுகளையும் செய்யாமல், டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 20 ஆயிரம் லிட்டர் நீரை, இலவசமாக விநியோகித்து வருகின்றது. நீர் பாதுகாப்பில், இந்த அரசு, கவனம் செலுத்தவே இல்லை. கைவிடப்பட்ட மற்றும் காலியாக உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் நீர், 'டேங்கர் மாபியாக்களிடம்' செல்கின்றது. ஆம் ஆத்மி அரசு, சுத்தமற்ற நீரையே, மக்களுக்கு விநியோகம் செய்கிறது. டில்லியில், காங்., ஆட்சிக்கு வந்தால், 20 ஆயிரம் லிட்டர் நீர், அனைவருக்கும் இலவமாக விநியோகிக்கப்படும். அதேசமயம், நீரை சேமிக்க, மக்களை ஊக்குவிப்போம். ஒரு லிட்டர் நீரை சேமித்தால், 30 பைசா வழங்கப்படும். ஒரு குடும்பம், 10 ஆயிரம் லிட்டர் நீரை சேமித்தால், 3,000 ரூபாய், அந்த குடும்பத்திற்கு கிடைக்கும். அந்த தொகை, அவர்களின் வங்கிக் கணக்குகளில், நேரடியாக போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.காங்., தலைவர் சுபாஷ் சோப்ராவின் குற்றச்சாட்டுகள், ஆதாரமற்றவை என, ஆம் ஆத்மி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

11.65 லட்சம் பரிந்துரைகள்

பா.ஜ., தேர்தல் அறிக்கையை தயாரிக்க, மக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டு வருகிறது. இதுவரை, 11.65 லட்சம் பரிந்துரைகள் வந்துள்ளதாக, டில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி கூறினார். அதில், சேதமடைந்த சாலைகள், சுத்தமற்ற நீர் விநியோகம், காற்று மாசு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, மக்கள் அதிக அளவில் குறை கூறியுள்ளதாக தெரிவித்தார்.எனினும், குடியுரிமை திருத்தச் சட்டம், அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளும் பரிந்துரைகளில் இடம்பெற்றிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X