ஸ்டாலின் முதல்வராவதை தடுக்கும் தி.மு.க.,வினர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பாய்ச்சல்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (3)
Advertisement


விருதுநகர் :''ஸ்டாலினை முதல்வராக்க விடாமல், தி.மு.க.,விலே பெரும் கூட்டம் உள்ளது,'' என விருதுநகர், காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.அவரது பேட்டி:தோழமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி, காங்கிரஸ். தி.மு.க.,வுடன், 2004 முதல், 2011 வரை கூட்டணியில் இருந்தோம். கூட்டணி முறிந்து, மீண்டும், 2016ல் கூட்டணி ஏற்பட்டது. கூட்டணி இல்லாத போது, காங்., யாரிடமும் செல்லவில்லை.கூட்டணியில் இருந்து வெளியே வந்தபோதும், கனிமொழி எம்.பி., ஆக உதவியது, காங்., தான். எங்களுக்கு தோழமை உணர்வு இல்லை எனச் சொல்லும் துரைமுருகன் போன்றவர்கள், வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். இதன்மூலம், ஸ்டாலினை முதல்வராக்க விடாமல், தி.மு.க.,விலே பெரும் கூட்டம் உள்ளது என்பது தெரியத்துவங்கி உள்ளது.காங்.,க்கு ஓட்டு வங்கி இல்லை என்கின்றனர். வேலுார் லோக்சபா தேர்தலில், காங்கிரசின் வாலாஜா உசேன் போட்டியிடப் போகிறேன் எனச் சொன்னபோது, அவர்கள் என்ன பேசினர் என்பது எங்களுக்கு தெரியும்.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி பேச, தமிழக காங்., தலைவர் அழகிரி மூன்று முறை சென்றார். நாங்கள் ஜெயிக்கும் இடத்தை தரவில்லை. சில ஒன்றியங்களில், ஒரு இடம் கூட தரவில்லை. இப்படி இருந்தால், தொண்டர்கள் எப்படி ஒன்றுபட்டு பணி செய்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.***

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
17-ஜன-202017:02:30 IST Report Abuse
Baskar இதை பற்றி ஏற்கனவே நான் எழுதி விட்டேன். சுடாலின் உன்னை சுற்றி ஏழு சனியன்கள் உள்ளன அதை விட்டு விளக்கு என்று .கேட்டால் தானே. உறுப்பிடாத ஜென்மம்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஜன-202015:36:49 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN குடும்ப ஆட்சி , அதிகாரம் , ஆணவம் , வானுயர சொத்து எல்லாம் ஒழியனும்னா அப்படித்தான் செய்யனும் ஓரம் கட்டனும்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஜன-202005:43:35 IST Report Abuse
 Muruga Vel துரைமுருகன் நமுட்டு சிரிப்பு சிரிப்பதை பார்த்தால் இவர் சொல்றது சரியா இருக்குமான்னு தோணுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X