வங்கி மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 16, 2020
Advertisement


புதுடில்லி: பி.எம்.சி., எனப்படும் பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களை வீட்டுச் சிறைக்கு மாற்றும் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில், 7,000 கோடி ரூபாய் மோசடி நடந்தது கடந்தாண்டு தெரியவந்தது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, எச்.டி.ஐ.எல்., என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு மட்டும், 4,355 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள இந்த நிறுவனத்துக்கு தொடர்ந்து கடன் வழங்கப்பட்டுள்ளது. அது வாராக் கடனாக மாறியது.
அதை மறைப்பதற்காக, வங்கி அதிகாரிகள் போலி கணக்கு காட்டியுள்ளனர். இது தொடர்பாக, மும்பை போலீசின் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல், அமலாக்கத் துறையும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், நேற்று முன்தினம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. எச்.டி.ஐ.எல்., நிறுவனத்தின் வாராக் கடன்களை வசூலிக்க, அதன் சொத்துக்களை விற்க மூன்று பேர் குழுவை அமைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தக் குழுவின் நடவடிக்கைகள் வேகமாக நடப்பதற்காக, மும்பை ஆர்தர் சிறையில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர்களான ராகேஷ் வாத்வான், அவருடைய மகன் சாரங்க் வாத்வானை, வீட்டுச் சிறையில் அடைக்கவும், அங்கு, சிறை அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து, அமலாக்கத் துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், நிறுவன உரிமையாளர்களை வீட்டுச் சிறையில் வைக்கும் உத்தரவுக்கு மட்டும் தடை கேட்கப்பட்டுள்ளது.
அதை ஏற்ற, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யகாந்த் அமர்வு, வீட்டுக் காவலில் வைக்கும், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X