செய்தி சில வரிகளில்

Added : ஜன 16, 2020
Advertisement

'இரட்டை இலை' சின்னம் முடக்கம்

புதுடில்லி : கேரளாவில் உள்ள கேரள காங்கிரஸ் - மாணி கட்சியின், 'இரட்டை இலை' சின்னத்தை, தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. பி.ஜே. ஜோசப் தலைமையிலான பிரிவு, இந்த சின்னத்தை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக, ஜோஸ் கே மாணி பிரிவு புகார் கொடுத்ததது. அதையடுத்து, வரும், 20ம் தேதி, அடுத்தக் கட்ட விசாரணை நடைபெறும் வரையில், சின்னத்தை இரு தரப்பும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
--------------
நடிகை வீட்டில், 'ரெய்டு'
பெங்களூரு : கன்னட மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை, ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்தமான, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று திடீரென சோதனையிட்டனர். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், பெட்ரோல் பங்க், பள்ளி என, பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
---------------


பா.ஜ., தலைவராக தேர்வு

கோல்கட்டா : மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக, இரண்டாவது முறையாக, திலிப் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார்.
உத்தரகண்ட் மாநில பா.ஜ., தலைவராக, எம்.எல்.ஏ.,வான பன்சிதர் பகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேச சட்டசபை சபாநாயகர் ராஜிவ் பிண்டல், தன் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் மாநிலத் தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.
-------------

விசா முறையில் புதிய வசதி

மும்பை : தென்னாப்பிரிக்க சுற்றுலா துறை அமைச்சர் மமலோகா குபாயி நுபானே, மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு வந்துள்ளார். ''இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா வருவோர், ஆன்லைன் மூலம் விசா பெறும் வசதி, சோதனை அடிப்படையில் வரும் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும்,'' என, நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்தார்.
-----------------------

அதானி நிறுவனம் மீது வழக்கு

புதுடில்லி: ஆந்திர மாநில மின் உற்பத்தி கழகத்துக்கு நிலக்கரி சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ., விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் தேசிய கூட்டுறவு வாடிக்கையாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் வீரேந்திர சிங், அதன் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ஜி.பி.குப்தா ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

----------------
வெளிநாட்டு நுாலுக்கு வரி விதிக்க முடிவு

புதுடில்லி: சீனா, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நுால்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X