அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 16, 2020
Advertisement
 இதே நாளில் அன்று

ஜனவரி 17, 2010ஜோதிபாசு: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1914 ஜூலை, 8ல், நிசிகாந்த பாசு -- ஹேமலதா தம்பதிக்கு பிறந்தார். பிரிட்டனில், சட்டம் பயின்ற அவர், 1940ல், தாயகம் திரும்பினார். 1944ல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர், தொழிலாளர் சங்க பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பொதுவுடைமை கட்சி, 1964ல் பிளவு பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சியின், பொலிட் பீரோவின் முதல், ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார். மேற்கு வங்கத்தில், 1967 மற்றும் 1969ல் அமைந்த, ஐக்கிய முன்னணி அரசில், துணை முதல்வராக பொறுப்பேற்றார். 1977 - 2000 வரை, மேற்கு வங்க முதல்வராக தொடர்ந்து பணியாற்றினார். உடல்நிலை மோசமானதால், 2,000ல், முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 2010 ஜன., 17ல் காலமானார். அவர் விருப்பப்படி, அவரது உடல் மருத்துவத் துறைக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X