செய்தி சில வரிகளில்...

Added : ஜன 16, 2020
Advertisement



5 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த, ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள், குடியரசு தின விழாவின் போது, தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது, விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து, கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
--------------

காஷ்மீரில் 5 பேர் விடுதலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து, படிப்படியாக அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஐந்து பேர், நேற்று விடுவிக்கப்பட்டனர்.
-------------
விபத்தில் ஐந்து பேர் பலி
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில், மலைப்பாதையில் சென்ற கார், விபத்துக்குள்ளாகி, கீழே விழுந்ததில், அந்த காரில் இருந்த ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் பலியாகினர். படு காயம் அடைந்த ஒரு பெண் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-----------
ஆர்ப்பாட்டம் : 33 பேர் கைது
முசாபர்நகர் : உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர். வன்முறைக்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக, 33 பேர் மீது, முசாபர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
--------------
தவழ்ந்து சென்ற குழந்தை பலி
ஆலப்புழா : கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில், சாலையோரம் உள்ள வீட்டைச் சேர்ந்த, ஒன்பது மாத பெண் குழந்தை, தவழ்ந்தபடியே, தவறுதலாக சாலைக்கு வந்துள்ளது. அப்போது அந்த வழியே வந்த கார் மோதியதில், உயிரிழந்தது.
---------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X