பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறள் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : கன்னியாகுமரியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, இரண்டு மணி நேரம் தாமதமாக, திருக்குறள் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
கன்னியாகுமரியில் இருந்து, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, விஜயவாடா, போபால், ஆக்ரா வழியாக, டில்லி - நிஜாமுதீன் வரை, திருக்குறள் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் செல்லும். இந்த ரயில், நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டும்; ஆனால், தாமதமாக இரவு, 9:30 மணிக்கு தான் புறப்பட்டது.
தொடர்ந்து, விழுப்புரம் வரை, இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த ரயில், நேற்று காலை, 9:05 மணிக்கு, சென்னை - எழும்பூர் வர வேண்டியது; ஆனால், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, காலை, 10:35 மணிக்கு வந்து சேர்ந்தது.முன்பதிவு செய்திருந்த பயணியர், இணையதளத்தில், 'ரன்னிங் ஸ்டேட்டஸ்' பார்த்தபோது, திருநெல்வேலியில், ஐந்தாவது நடைமேடைக்கு வருவதாக காண்பிக்கப்பட்டது; ஆனால், முதலாவது நடைமேடைக்கு ரயில் வந்தது. இதனால், பயணியர் குழப்பமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
17-ஜன-202009:39:40 IST Report Abuse
R Hariharan ஏதாவது ஒரு ரயில் இப்படி தாமதமாக வருவது வழக்கம். It has started services from Sat Oct 19, 2002. It has 26 halts. சுமார் 18 வருடங்கள் ஆகிறது இன்று வரை இந்த ரயில் வாரம் இருமுறை தான் ஓடுகிறது. தென் தமிழகத்தை கவர் செய்து வருகிறது. தென்காசி செங்கோட்டை, ராஜபாளையம் பயணிகள் இந்த ரயில் மூலம் விருதுநகர் வந்து நியூ டெல்லி பயணம் செய்கிறார்கள். இந்த ரயில் தினசரி விட வேண்டும் பல பயணிகள் சங்கம்கள், டெல்லி தமிழ் சங்கம், ஹைதெராபாத், தமிழ் சங்கம் என்னை போன்ற பலரும் கோரிக்கை விடுத்தது இருக்கிறோம். ஏன்வேய் இந்த ரயில் வரும் நடப்பு ரயில்வே கால அட்டவனுயில் தினசரி விட சேர்க்க பட வேண்டும். மேலும் பயண நேரத்தியும் குறைக்க வேண்டும். எங்களது கனவு நனவாக வேண்டுஎம். இந்த ரயில் பல வருடங்களாக வரவும் ஒரு முறை விடப்பட்டு சுமார் 5 வருடங்கள் முன்புதான் வாரம் இரு முறை விட்டார்கள் உங்கள் மூலம் கூடிய சீக்ரம் நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X