பொது செய்தி

தமிழ்நாடு

உலகில் நான்காவது இடத்தில் இந்திய கடலோர காவல் படை: தலைமை இயக்குனர் நடராஜ் பெருமிதம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement
உலகில் நான்காவது இடத்தில்  இந்திய கடலோர காவல் படை: தலைமை இயக்குனர் நடராஜ் பெருமிதம்

சென்னை :''வரும், 2025ம் ஆண்டுக்குள், கப்பல்களின் எண்ணிக்கை, 200; விமானங்களின் எண்ணிக்கை, 100 ஆக உயர்த்துவதே இலக்கு,'' என, இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன் தெரிவித்தார்.
இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கிடையே, 2006ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இரு நாட்டுக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்கள், ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கூட்டுப் பயிற்சிக்காக, ஜப்பான் கடலோரக் காவல் படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்துக் கப்பல், கேப்டன் கியோஷி ஹரடா தலைமையில், 60 வீரர்களுடன், ஐந்து நாள் பயணமாக, 16ம் தேதி, சென்னை துறைமுகத்திற்கு வந்தது.
இரு நாட்டு கடலோர காவல் படை வீரர்கள், சென்னையிலிருந்து, 15 கடல் மைல் துாரத்தில், கடலுக்குள், நேற்று கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். அதில், கடலில் தத்தளிப்பவரை மீட்டல், சட்ட விரோதமாக நுழையும் கப்பலை வழிமறித்து நிறுத்துதல், வணிக கப்பலை கொள்ளையடிப்பதை தடுத்தல், கொள்ளையரிடமிருந்து கப்பலை மீட்டல் உள்ளிட்ட, பல்வேறு சாகசங்களை, வீரர்கள் செய்து காண்பித்தனர்.இந்த சாகச நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, வீரா மற்றும் அபீக் ஆகிய, கப்பல்கள் ஈடுபட்டன. ஜப்பான் கடலோர காவல் படையின், எசிகோ கப்பலும், சாகசத்தில் பங்கேற்றது.இந்த சாகச நிகழ்ச்சிகளை, இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், ஜப்பான் கடலோர காவல் படையின் கமாண்டர் டககிரோ ஒகுஷிமா, இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி., எஸ்.பரமேஷ் பார்வையிட்டனர்.ஒத்திகை நிகழ்ச்சிக்கு பின், கே.நடராஜன் மற்றும் டககிரோ ஒகுஷிமா அளித்த பேட்டி:இந்திய கடலோர காவல் படையில், துவக்கத்தில், 45 கப்பல்களும், 40 விமானங்கள் மட்டுமே இருந்தன. இது தற்போது, 145 கப்பல்கள், 62 விமானங்களாக அதிகரித்துள்ளன. இதேபோல, 60 இலகு ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. 14 இரட்டை இன்ஜின்கள் பொருத்திய கனரக ஹெலிகாப்டர்கள், 15 பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களும், இந்திய கடலோர காவல் படையில் இணைய உள்ளன. மேலும், 16, 'மாக் 3' ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் ஹெலிகாப்டர், வரும் மார்ச்சில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. உலக அளவில், இந்தியா, நான்காவது பெரிய கடலோர காவல் படை வைத்துள்ள நாடாக உள்ளது. விரைவில், மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்.வரும், 2025ம் ஆண்டுக்குள், கப்பல்களின் எண்ணிக்கை, 200; விமானங்களின் எண்ணிக்கையை, 100 ஆக உயர்த்துவதே இலக்கு.
அடுத்த ஆண்டில், சர்வதேச அளவில் கடலோர காவல் படை மாநாடு, இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; அதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதில், தேடுதல் மற்றும் மீட்பு தொடர்பான, சர்வதேச ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
17-ஜன-202018:12:50 IST Report Abuse
Gopi எண்ணை படலத்தை நீக்க என்ன வழி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X