பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா பொங்கல் விழாபொது மக்கள் வரவேற்பு

Added : ஜன 16, 2020
Advertisement



சென்னை :பூங்காக்களில், பொங்கல் பண்டிகை கொண்டாடிய, தோட்டக்கலைத் துறை முயற்சிக்கு, பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.தோட்டக்கலைத் துறை வாயிலாக, சென்னை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில், தோட்டக்கலை பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை, பொது மக்களின் பொழுதுபோக்கு மையமாக மட்டுமின்றி, தாவரவியல் படிக்கும் மாணவர்களின் பயிற்சிக் களமாகவும் இருந்து வருகிறது.
இந்த பூங்காக்களில், பொங்கல் பண்டிகை ஒட்டி, 15ம் தேதி முதல், இன்று வரை, கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, அனைத்து பூங்காக்களிலும், 15ம் தேதி காலை, பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தப்பட்டது. மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தோட்டக்கலை பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. சத்தான காய்கறிகள், பழங்கள் உண்ணுவதன் அவசியம் குறித்தும், நாடகங்கள், நாட்டுப்புற பாடல்கள் வாயிலாக, பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
சென்னை, தேனாம்பேட்டை, செம்மொழி பூங்காவில், இரண்டு நாட்களாக நடந்து வரும் கலை நிகழ்ச்சிகளை, நுாற்றுக்கணக்கான பேர் பார்த்து ரசித்தனர்.
காணும் பொங்கலை ஒட்டி, இன்றும் தோட்டக்கலை பூங்காக்களில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. ***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X