சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை அரசு பஸ் கண்டக்டர் ஈரோட்டில் மயங்கி விழுந்து சாவு

Added : ஜன 16, 2020
Advertisement

ஈரோடு :மதுரை அரசு பஸ் கண்டக்டர், ஈரோட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.
மதுரை, சோலை அழகுபுரம் முதல் தெரு, ஜானகி நகரை சேர்ந்தவர் இளங்கோவன், 52. இவர், அரசு பஸ் கண்டக்டராக மதுரை கிளையில் பணியாற்றி வந்தார். ஆஸ்துமா, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெருந்துறை ஐ.ஆர்.டி.டி., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பெறுவதற்காக மதுரையில் இருந்து, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்சில் வந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கண்டக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X