பொது செய்தி

தமிழ்நாடு

கோவை குற்றாலம் குதூலம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்

Added : ஜன 16, 2020
Share
Advertisement


பேரூர் :கோவை குற்றாலத்தில், மக்கள் மகிழ்ச்சியுடன் நீர்வீழ்ச்சியில் நீராடினர்.
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.பொங்கல் தினத்தன்று, 3,219 பேர் வருந்திருந்தனர். நேற்று மாட்டு பொங்கல் என்பதால் காலை முதலே, சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். வெளிமாவட்டங்களில் இருந்தும், குடும்பத்துடன் வந்திருந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து, நுழைவு சீட்டு பெற்றனர். பயணிகள் எண்ணிக்கை அதிகரிந்திருந்ததால், எட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். உணவு சமைத்து எடுத்து வந்திருந்தோர், மரங்களின் அடியில் அமர்ந்து குடும்பமாக உண்டு மகிழ்ந்தனர். இரண்டு நாட்களில், 7,929 பேர் வருகை தந்திருந்தனர். இதன் வாயிலாக, சூழல் சுற்றுலாக் குழுவுக்கு, 4.08 லட்சம் ரூபாய் வசூலானது.
போக்குவரத்தை சீரமைக்க முறையான நடவடிக்கை இல்லாததால் நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X