பொது செய்தி

தமிழ்நாடு

கணியூரில் அமலுக்கு வந்தது 'பாஸ்டேக்' முறை 10 ஆயிரத்து, 917 வாகனம் பதிவு

Added : ஜன 16, 2020
Share
Advertisement

கோவை: கோவை கணியூர் சுங்கச்சாவடிகளில் 'பாஸ்டேக்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை, 10 ஆயிரத்து, 917 வாகனங்கள் 'பாஸ்டேக்' பெற்றுள்ளன.
கோவையில் கணியூர் சுங்கச்சாவடியில் தினமும், 30 ஆயிரம் வாகனங்கள் கடந்துசெல்கின்றன. இங்கு 'பாஸ்டேக்' மின்னணு கட்டண முறை ஏற்கனவே, நடைமுறையில் இருந்தது. கடந்தாண்டு டிச., முதல் இம்முறையை கட்டாயமக்கப்பட்டது.
ஆனால், பாஸ்டேக் அட்டை தட்டுப்பாடு காரணத்தால் ஜன., 15 வரை பாஸ்டேக் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் ( 15 ம்தேதி ) முதல் சுங்கச்சாவடிகளில் 'பாஸ்டேக்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய திட்ட இயக்குனர்(கோவை) உதயசங்கர் கூறுகையில்,
''நகாய்' வசம் இருக்கும் கணியூர் சுங்கச்சாவடியில் உள்ள, 10 'லேன்'களில் கடந்த, 15 முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை, 10 ஆயிரத்து, 917 வாகனங்கள்(45.77 சதவீதம்) பாஸ்டேக் அட்டை பெற்றுள்ளன.
பாஸ்டேக் பெறாத, 61 வாகனங்களிடம், இரு மடங்கு கட்டணம் இரு நாட்களில் வசூலித்துள்ளோம். மீதமுள்ள வாகனங்கள் பாஸ்டேக் பெற அறிவுறுத்திவருகிறோம்.,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X