பிச்சாவரத்தில் படகு போட்டி சென்னை பயணிகள் அசத்தல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சாவரத்தில் படகு போட்டி சென்னை பயணிகள் அசத்தல்

Added : ஜன 16, 2020

கிள்ளை :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு இல்லம் சார்பில், சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி, பிச்சாவரத்தில் நடந்தது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை தாவரங்கள் நிறைந்திருப்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்தாண்டு முதல் முறையாக, சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நேற்று நடத்தப்பட்டது. ஏழு துடுப்பு படகுகளில், தலா 2 பேர் என வெளியூரை சேர்ந்த 14 சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.
போட்டியில், முதல் இடம் பிடித்த சென்னை ஹரீஷ், ஞானம், இரண்டாம் இடம் பிடித்த திருவாரூர் அஜீத்குமார், பாலாஜி, மூன்றாம் இடம் பிடித்த கோயம்புத்துார் ஜாஷகான், இம்ரான்கான் ஆகியோருக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் தினேஷ்குமார், முறையே ரூ.3 ஆயிரம், 2 ஆயிரம், ஆயிரத்துக்கான பரிசு கூப்பனை வழங்கினார். ஊழியர்கள் செந்தமிழ்ச்செல்வன், சிவராஜன் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X