சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மாவட்டத்துக்கு, 'டார்ச்சர்' தரும் தி.மு.க., வட்டம்!

Added : ஜன 16, 2020
Share
Advertisement
 மாவட்டத்துக்கு, 'டார்ச்சர்' தரும் தி.மு.க., வட்டம்!

''அரசுக்கு யோசனை சொல்லியிருக்காங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''அந்த அளவுக்கு புத்திசாலி யாரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''முழுசா கேளுங்க... தமிழக மின் வாரியத்துல, செயலர்னு ஒரு பதவி இருக்குதுங்க... இந்தப் பதவிக்கு, சென்னை, தலைமைச் செயலகத்துல, துணைச் செயலரா இருக்கிற ஒருத்தரை, தமிழக அரசு நியமிக்குமுங்க...''இவர் தான், செயற்பொறியாளர் முதல், இயக்குனர் வரையிலான முதல்நிலை அதிகாரிகளின் இடமாறுதல், போனஸ் பேச்சுகளை கவனிச்சு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான வாரிய தலைவரிடம் அறிக்கை குடுப்பாருங்க...''அதே நேரம், துணைச் செயலரா இருக்கிறவங்களை, சிலர் எளிதா அணுகி, காரியம் சாதிச்சுக்குறாங்க... இப்ப, காலியா இருக்கிற மின் வாரிய செயலர் பதவியை, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இணை மேலாண் இயக்குனர் தான் கவனிக்கிறாருங்க...''அதனால, 'புது செயலரையும், ஐ.ஏ. எஸ்., அதிகாரியாவே போட்டுட்டா, வாரிய சேர்மன் உத்தரவுகளை, எந்த குறுக்கீடுகளும் இல்லாம, சீக்கிரமா முடிக்க முடியும்'னு, அரசுக்கு, வாரிய அதிகாரிகள் சிலர் யோசனை சொல்லியிருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''அடிக்கடி வெளியில அழைச்சுண்டு வரணும்னு கேக்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''யாரை, எங்க அழைச்சிட்டு போகணுமாம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''உடல்நிலை பாதிப்பால, பொது நிகழ்ச்சிகள்ல, விஜயகாந்த் அதிகம் கலந்துக்கறது இல்லை... சமீபத்துல, சென்னை, கொரட்டூர்ல நடந்த பொங்கல் விழாவுல மட்டும் கலந்துண்டாரோல்லியோ...''அதுல, சில நிமிடங்கள் தான் பேசினார்... அவர் தட்டு தடுமாறி பேசினாலும், தொண்டர்கள் உற்சாகமா கைதட்டினா ஓய்...''அவருக்கும், தொண்டர்களை பார்த்ததுல, ரொம்பவே உற்சாகம்... அதனால, 'இனி விஜயகாந்தை இந்த மாதிரி, அடிக்கடி வெளியில அழைச்சுண்டு வாங்கோ... இதனால, அவரோட உடம்பும் சரியாகும்... தொண்டர்களும் உற்சாகமா இருப்பா'ன்னு, பிரேமலதாவிடம், நிர்வாகிகள் சிலர் ஆலோசனை சொல்லியிருக்காளாம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சொந்தக் கட்சி பிரமுகருக்கே, 'டார்ச்சர்' தர்றாரு பா...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார், அன்வர்பாய்.''எந்தக் கட்சியில, யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதியைச் சேர்ந்த, மாவட்ட தி.மு.க., பிரமுகர் ஒருத்தரும், வட்டச் செயலர் ஒருத்தரும், கீரியும், பாம்புமா இருக்காங்க... மாவட்ட பிரமுகர், கழிவு நீர் அகற்றும் லாரிகளை வச்சு, தொழில் பண்ணிட்டு இருக்காரு பா...''அந்த லாரிகளை, தன் ஏரியாவான கந்தன்சாவடிக்குள்ள வந்து, தொழில் செய்யக் கூடாதுன்னு, வட்டச் செயலர், 'டார்ச்சர்' தர்றாராம்... இதய நோயாளியான மாவட்ட பிரமுகர், தரமணி போலீஸ்ல புகார் குடுத்திருக்காரு பா...''போலீஸ்காரங்களோ, 'இது உங்க உட்கட்சி தகராறு... உங்க தலைமையிடம் புகார் பண்ணுங்க'ன்னு திருப்பி அனுப்பிட்டாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.தெருவில் சென்ற இருவரை நிறுத்திய அண்ணாச்சி, ''சேகர், வெங்கடேசன், இன்னைக்கு காணும் பொங்கலாச்சே... வாங்க பார்க்குக்கு போவோம்...'' என அழைக்க, நண்பர்கள் பட்டாளம் நடக்க துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X