பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரூபாய்கு டீ விற்பனை

Added : ஜன 16, 2020
Advertisement

புதுக்கோட்டை :திருவள்ளுவர் தினத்தையொட்டி, ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்தவரை, பொதுமக்கள் பாராட்டினர்.
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே பரவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம், 36. இவர் அங்கு, சத்யா என்ற பெயரில் டீக்கடை வைத்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணி முதல், ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்தார். மேலும், அதே ஊரைச் சேர்ந்த மக்கள் நல இயக்கத்தினர், டீ குடிக்க வந்தவர்களுக்கு, பெரியவர்களுக்கு மரக்கன்றும், சிறுவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தையும் வழங்கினர். இரவு, 8:00 மணி வரை, 500க்கும் மேற்பட்டோர் ஒரு ரூபாய் டீ குடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X