சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ஐஸ்' வைத்தால் தான் ஓட்ட முடியும்!'

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'ஐஸ்' வைத்தால் தான் ஓட்ட முடியும்!'

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் தேர்வு, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடந்தது. தலைவராக, அ.தி.மு.க., சார்பில், ஜெகதீசன் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக, தே.மு.தி.க.,வின் பிரசாத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பின் நடந்த கூட்டத்தில், தலைவர் ஜெகதீசன், 'மா.கம்யூ., மூத்த நிர்வாகி முத்துசாமி தான் நமக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் தலையிடும் போதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று எனக்கு தெரியும்; அதன்படி, துணைத் தலைவர் தேர்வும், சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. அனைவரது ஒத்துழைப்பாலும், ஐந்தாண்டுகளை சிறப்பாக முடிப்போம்' என்றார்.சக கவுன்சிலர் ஒருவர், 'இப்படி மார்க்சிஸ்ட் உறுப்பினரை, 'ஐஸ்' வைத்தால் தான், அஞ்சு வருஷத்தை ஓட்ட முடியும். இல்லைன்னா, தொட்டதுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், மறியல்னு கம்யூனிஸ்ட் காரங்க களத்துல இறங்கிடுவாங்கல்ல' என முணுமுணுக்க, சக கவுன்சிலர்கள், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
17-ஜன-202011:11:03 IST Report Abuse
karutthu இப்போதெல்லாம் கம்யூ ...கட்சி போராட்டங்களையெல்லாம் மக்கள் கண்டுகொள்வதில்லை .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-ஜன-202005:57:13 IST Report Abuse
D.Ambujavalli முதலில் பிரசினை செய்பவர்களைத் தன்னைக்கட்ட வேண்டும் என்ற சூட்சுமம் தெரிந்தவர் பிழைத்துக்கொள்வார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X